தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு: அதிகாரிகள் அதிருப்தி

கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தபால் அதிகாரிகளின் ஏப்ரல் மாத ஊதியத்தை குறைக்க இலங்கை அரசு முடிவு செய்தது. அரசின் இந்த முடிவுக்கு தபால் துறை அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இலங்கை தபால் சேவைகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதத்திற்கான ஊதிய குறைப்பு குறித்து தபால் அதிகாரிகள் மகிழ்ச்சியடையவில்லை என தெரிவித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில்,அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில், தபால் துறையினருக்கும் முக்கிய பங்கு இருந்ததாக தபால் அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும் கொரோனா நிதி பங்களிப்பாக ஏப்ரல் மாதத்திற்கான ஒரு நாள் ஊதியத்தை அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளதையும் சுட்டிகாட்டியுள்ளது.

போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எடுத்த தற்காலிக முடிவுகளின் காரணமாக, அதிகாரிகளின் ஊதியத்திலிருந்து குறைக்கப்பட்ட பணம் அவர்களுக்கு திருப்பித் தரப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.