தனி மனிதர்களிடம் தங்கியுள்ள நிதி தாயகம் நோக்கி விரிய வேண்டும்

எமது மண்ணின் விடுதலைக்காக தமது கைகளில் ஆயதங்களை ஏந்தி நின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வளர்ச்சிக்காகவும் அதன் இராணுவக் கட்டமைப்பின் அபிவிருத்திக்காகவும் பலத்திற்காகவும் இன்னும் சாதாரணமாகச் குறிப்பிடுவதானால் தலைவர் பிரபாகரன் அவர்களின் எண்ணத்தின் படி போராளிகள் நல்ல சத்தான உணவுகளை உண்டு சுகதேகிகளாகவும் போராடக் கூடிய வலிமை பெற்றவர்களாகவும் இருப்பதற்காகவும், இன்னும் பல நிர்வாகத் தேவைகள் புலனாய்வுத் தேவைகள் ஆகியவற்றுக்காகவும், விடுதலை சார்ந்த கலை இலக்கியத் படைப்புக்களின் பரவலாக்கல் முயற்சிகளுக்கும் இயக்கத்தின் பிரச்சார திட்டங்களுக்கும், இராணுவத்தினரோடு போரிடுகின்றபோது காயமடைகின்ற அல்லது ஊனமடைகின்ற போராளிகளி;ன் நலன்களுக்காகவும் பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் சேகரிக்கபபட்ட பாரிய நிதி 2009 ஆண்டுக்கு பின்னர் பலரால் முடக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் நன்கு தெரிந்த விடயமாக இருந்தாலும், அவை பேசப்படாத அல்லது பேச மறுக்கப்படுகி;னற ஒரு விடயமாகவே இருந்து வருகின்றது.
தமிழீழம் என்னும் தாயக பூமி, முப்படைகள் கொண்ட ஒரு முழுநாடாகவும் அபிவிருத்தியடைந்த ஒரு தமிழீழமாகவும் தோன்றியிந்தால் அங்கு நிறையவே அபிவிருத்திகள் இடம்பெற்றிருக்கும். இந்த அபிவிருத்திகளுக்காக இன்று பலரால் முடக்கபபட்ட நிலையில் தனி நபர்களின் சொத்தாக மாறியுள்ள அந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் பாரிய அழிவைச் சநதித்த விடுதலைப்புலிகள் இயககத்தின் முழுக் கட்டமைப்பும் தாயக மண்ணில் சிதறுண்டு போனதினால் பாரிய நிதி இப்போது பல வெளிநாடு வாழ் தமிழர்களை கோடீஸ்வரர்கள் ஆக்கியுள்ளது.

இந்த முடக்கப்பட்ட நிதி தொடர்பாக யாழ்பபாணத்தில் வாழும் முன்னாள் போராளி ஒருவர் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டி காணப்பட்ட போது தெரிவித்த கருத்துக்களை மக்கள் கேட்டறிய வேண்டும். அவர் சொல்லுகின்ற விடயஙகளில் உள்ள நியாயங்களை கவனிக்க வேண்டும். இந்த விடயங்கள் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கேட்டறியும் முக்கிய அம்சமாக திகழ வேண்டும். வெளிநாடுகளில் தனிமனிதர்களிடம் சி;க்கியுள்ள நிதியானது தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட போராளிகள் மற்றும் பொதுமக்கள் நலன்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பது மிகவும் அவசியமானது. காலம் தாழ்த்தி என்றாலும், எமது கனடா உதயன் தனது தொடர்ந்து வரும் இதழ்களில் பல விரிவான தகவல்களை தருவான் என்று அனைவருக்கும் கூற விரும்புகின்றோம்.