தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய கனடாவின் இளம் பெண் படைப்பாளி சாருதி ரமேஷ்

2000ம் ஆண்டு கனடாவில் பிறந்த சாருதி ரமேஷின் பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை. அவர்கள் சிறு வயதிலிருந்தே சாருதியை ஒரு மகளாக அன்பு செலுத்தி வளர்த்தாலும் தீரச்செயல்களுக்கு வித்திடக் கூடியதாக, கராட்டி நீச்சல் போன்ற விளையாட்டுகளிலும் பயிற்றுவித்தார்கள்.
தனது கல்வி தொடர்பான விடயங்களிலும் மிகுந்த அக்கறை கொண்ட சாருதி வாசிப்பிலும் கூடிய நேரத்தை ஆர்வத்துடன் கழித்தார். சிறுவயதிலிருந்தே அனைத்து விடயங்களிலும் சமாந்தரமாக கவனம் செலுத்திய அவரிடம் எழுத்தாற்றல் உருவாகியுள்ளதை அவரது பெற்றோர் அவதானித்தார்கள். குறிப்பாக அவரது தாயார் மிகுந்த அக்கறையோடு தங்கள் பிள்ளையின் வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.
தந்தையார் ரமேஷ் அவர்களும் தனது தொழில் முயற்சிகளில் கவனமாக இருந்து, பொருளாதாரம் என்னும் செல்வத்தைத் தேடிக்கொள்ள, தாயார் சாருதிக்கு கல்விச் செல்வம் மற்றும் கலைச் செல்வம் ஆகியவற்றைத் தேடித் தேடிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
இவ்வாறான ஆற்றல் மிகு மாணவியாக பாடசாலையில் மிளிர்ந்த சாருதி, தனது நான்கு வயதிலிருந்தே தான் நினைத்தை கற்பனையை சேர்த்து ஆக்கங்களை படைத்தார். தனது 12வது வயதில் “A Choice:Book-1” என்றும் நூலை எழுதிய அவர் மிகுந்த ஆர்வத்தோடு தனது 13வது வயதில் முதலாவது ஆங்கில நாவலை எழுதிய பெருமையைப் பெற்றார்.
2014ம் ஆண்டு கனடாவில் இவரது ஆங்கில நூல்களின் வெளியீட்டு விழா நடைபெற்றது.தொடர்ந்து அமெரிக்காவில் இடம்பெற்ற நூல்கள் கண்காட்சியில் பங்குபற்றிய சாருதி, ஒரேயொரு இளம் படைப்பாளி, வளர்ந்தவர்களுக்காகவும் பதின்ம வயதுடையவர்களுக்காகவும் படைப்புக்களை எழுதும் ஆங்கில எழுத்தாளர் என்ற கௌரவத்தையும் இவர் பெற்றார்.
தொடர்ந்து “A Prophecy:Book 2 என்னும் தனது இரண்டாவது நூலை எழுதிய சாருதி தொடர்ந்து 2016ம் ஆண்டு :ஊhழளநn ர்லடிசனை ளுநசநைள”என்னும் நூலையும் எழுதி வாசகர்களது பாராட்டுக்களைப் பெற்றார்..
மேற்படி இரண்டு நூல்களும் சென்னையில் உள்ள எழுத்தாளர் ஒருவரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. நாவல்கள் எழுதுவதில் மாத்திரம் அல்ல ஆங்கிலக் கவிதைகள் எழுதுவதில் வல்லவராகத் திகழும் சாருதி ஈழத்துப் போரில் வீரமரணம் அடைந்த போராளிகளுக்காவும் உருக்கமான ஆங்கிலக் கவிதைகள் எழுதியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேல்நாட்டுச் சங்கீதம் மற்றும் ஹிப் ஹொப் என்னும் மேல்நாட்டு நடன வகையையும் பயின்று தனது ஆசிரியை மற்றும் வேற்றுநாட்டு நடன மங்கையர் ஆகியோரது பாராட்டுக்களையும் பெற்றார். கராட்டியில் கறுப்புப் பட்டி பெற்ற இவர் சில வேளைகளில் கனி~;ட மாணவ மாணவிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றினார்.

தற்போது ரொரென்ரோ பல்கலைக் கழகத்தின் மிசிசாகா வளாகத்தில் உடற்கூறுகள் தொடர்பான விஞ்ஞானத்தில் பட்டம் பெறுவதற்காக கற்றுவரும் சாருதி ரமேஷ் உடற்கூறுகள் பற்றிய ஆய்வுகள் பரிசோதனைகள் தொடர்பான கல்வியைப் பயின்று புலனாய்வுத் துறையில் பணியாற்றும் குறிக்கோளோடு உள்ளார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.
சாருதி எழுதிய மூன்று பாடல்களான “ அப்பா, அம்மா”,“போராடு”“எங்கே சென்றாய் நண்பா!” ஆகியவை புகழ்பெற்ற தமிழ்நாட்டுப் பாடகரான வி. எம். மகாலிங்கம் அவர்களால் இசையமைக்கப்பட்டு பாடப்பட்டன. அத்துடன் அந்த இசைத்தட்டு வெளியீட்டு விழா கனடாவிலும் நடத்தப்பெற்றது.
இவ்வாறான ஒரு இளம் ஆங்கில படைப்பாளியை எமது வாசகர்களுக்கு அறிமுகம் செய்வதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். –சத்தியன்