தங்கம் வென்றால் தான் சாக்ஷிக்கு கல்யாணம்! சொன்னது யார் தெரியுமா?

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற பிறகு தான் சாக்ஷிக்கு திருமணம் செய்து வைக்கப் போவதாக அவரது தாயார் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஹரியானாவை சேர்ந்த சாக்ஷி மாலிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்று அசத்தினார்.

இந்நிலையில் இந்த சாதனை நாயகி விரைவில் தனது மனம் கவர்ந்த நாயகனை கரம்பிடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

பிரபல மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியன் என்பவரை சாக்ஷி மாலிக் திருமணம் செய்ய உள்ளதாக சாக்ஷி மாலிக்கின் சகோதரர் சச்சின், செய்தி நிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

என்னைப் போன்ற ஒரு மல்யுத்த வீரரைக் காதலித்து வருகிறேன். ஆனால் அவருடைய பெயரைச் சொல்லமாட்டேன் என்று சாக்ஷி மாலிக்கும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சாக்ஷியின் திருமணம் குறித்து வெளியான செய்தியில் உண்மை இல்லை என்றும், 2020 நடக்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே சாக்ஷியின் ஒரே இலக்கு என்று அவரது தாயார் சுதேஷ் மாலிக் தெரிவித்துள்ளார்.

சாக்ஷியின் காதலரான மல்யுத்த வீரர் சத்யவார்ட் காடியன் கடந்த 2014ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.