டில்லி கலவரத்தில் இந்துக்களை அடித்து கொன்றதின் பின்னணியில் ஆம் ஆத்மி பார்ட்டியின் தாஹிர் உசேன் !!

டில்லி வன்முறையின் போது, உளவுத்துறை அதிகாரி கொல்லப்பட்டது தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நடந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். சாந்த் பக் ஏரியாவில், மத்திய உளவுத்துறையில் டிரைவராக பணிபுரிந்த அங்கித் சர்மா என்பவர் கொலை செய்யப்பட்டு சாக்கடைக்குள் வீசப்பட்டார். இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேனுக்கு தொடர்பு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவரது வீட்டிற்கு அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் இருந்து தான் அங்கித் சர்மா சடலம் கண்டுபிடிக்கப்பட்டதால் சந்தேகம் வலுத்தது. தாஹிர் உசேன் வீட்டின் மாடியில் இருந்து சிலர் கல்வீசுவது போலவும், அதில் அவர் நிற்பதுபோன்ற காட்சிகளும் இடம்பெற்றன. இதனையடுத்து, தாகிர் உசைன் மீது சட்டப்பிரிவு 365 மற்றும் 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து தாகிர் உசைன் ஆம் ஆத்மியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டு மீதான விசாரணை முடிந்து அதிலிருந்து அவர் விடுதலையாகும் வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பார் என ஆம் ஆத்மி கட்சி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.