டில்லியில் யோகி ஆதித்யநாத்: மோடி, அமித்ஷாவை சந்திக்கிறார் !!

உ.பி.,யில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.தற்போது, ‘கோவிட் பெருந்தொற்றை யோகி ஆதித்யநாத் அரசு சரியாக கையாளவில்லை’ என்ற விமர்சனம் எதிர்க்கட்சிகளால் பலமாக முன் வைக்கப்படுகிறது. கங்கை நதியில் நிறைய சடலங்கள் மிதந்தது, ஆதித்யநாத் அரசுக்கு தேசிய அளவில் நெருக்கடியை உண்டாக்கியது. பா.ஜ., தேசிய பொது செயலர் சந்தோஷ்குமார் மற்றும் ராதா சிங் ஆகியோர் அங்கு சென்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.இதனால், யோகி மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகின. ஆனால், இதனைபா.ஜ., மேலிடம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. யோகி ஆதித்யநாத் முதல்வராக தொடர்வார் என அறிவித்தது.

இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக டில்லி சென்றுள்ளார். இன்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டு உள்ள அவர்,நாளை பிரதமர் மோடியையும் சந்திக்க உள்ளார்.