டிடிவி தினகரன் மீது காவல் ஆணையரிடம் தீபா புகார்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஜெ.தீபா. இவரது சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று அளிக் கப்பட்டுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எனது சகோதரர் தீபக் அழைத்ததின் பேரில் கடந்த 11-ம் தேதி போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வீட்டுக்கு சென்றேன். என்னுடன் எனது நலன் விரும்பிகளும் வந்திருந்தனர். அங்கு பத்திரிகை நிருபர்களும் இருந்தனர். அப்போது அங்கிருந்த டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், பத்திரிகை நிருபர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.
அங்கிருந்த கோதண்டராமன் மற்றும் அவ ருடன் இருந்தவர்கள் எங்கள் மீது தாக்கு தல் நடத்தி வெளியே தள்ளினர். தீபக் உறுதுணையோடு டிடிவி தினகரன் தூண்டுதலின் பேரிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது. எனவே, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.