Go to ...
Canada Uthayan Tamil Weekly
* வைரமுத்துக்கு எதிராக ஸ்ரீவில்லிபுத்தூரில் உண்ணாவிரதம்    * கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை    * மத சுதந்திரம் இல்லாமையால் பாகிஸ்தானை விட்டு வெளியேறும் சிறுபான்மையினர்!    * இலங்கையில் பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவித் பாஜ்வா சுற்றுப்பயணம்
Arrow
Arrow
Slider
Canada Uthayan on YouTubeCanada Uthayan on LinkedInCanada Uthayan on PinterestRSS Feed

Thursday, January 18, 2018

ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு


ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன.

ஜெருசலேம் நகரை, மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. பல ஆண்டுகளாக இந்த சர்ச்சை தொடரும் நிலையில், ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தின் மீது ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பில் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராகவும், ஐ.நா.வுக்கு ஆதரவாக இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் ஒட்டளித்தன. ஐ.நா.வுக்கு எதிராகவும், டிரம்ப்பிற்கு ஆதரவாகவும் 9 நாடுகள் மட்டுமே ஒட்டளித்தன. 35 நாடுகள் ஒட்டளிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.

அமெரிக்காவிற்கு எதிராக ஒட்டளிக்கும் நாடுகளுக்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகள் வீதிக்கப்படும் என அமெரிக்கா தரப்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது. மேலும் எதிராக ஓட்டளிக்கும் நாடுகளின் பெயர்கள் குறித்து வைத்துக் கொள்ளப்படும் எனவும் ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே தெரிவித்திருந்தது அமெரிக்காவின் பகிரங்க மிரட்டலாகவே தெரிந்தது. எனினும் 128 நாடுகள் டெனால்ட் டிரம்ப்பின் முடிவுக்கு எதிராக அணி திரண்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

About netultim2