ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் ராம மோகன ராவ் ஆஜர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்திவரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் முன்பு, தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் ஆஜரானார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எழிலகம் கல்சா மகால் கட்டிடத்தில் விசாரணை ஆணையத்துக்கான அலுவலகம் உள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து, அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் தகவல்கள் பெற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் முடிவு செய்தது.

தலைவர் நீதிபதி ஆறுமுகசாமி, விசாரணையை தொடங்கி நடத்தி வருகிறார்.

இதில், திமுகவை சேர்ந்த டாக்டர் சரவணன், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழுவில் இருந்த ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு, மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் உள்ளிட்டோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

மேலும் இதில், முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ், ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஆகிய இருவரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டனர்.

ஜெயலலிதாவின் ஆலோசகராக இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் புதன்கிழமை நீதிபது ஆறுமுகசாமி முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று (வியாழக்கிழமை) தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் விசாரணை ஆணையத்தின் முன் ஆஜரானார்.