ஜெயலலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் தலைமையில் நடக்கும் உண்ணாவிரதத்துக்கு போலீஸார் அனுமதி

சென்னையில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி மனு அளிப்பதற்காக காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன் எம்பி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள். | படம்: எஸ்.ஆர்.ரகுநாதன்

ஜெயலலிதா மரணத்துக்கு நீதி விசாரணை கோரி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தை எழும்பூர் ராஜ ரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் நடத்திக்கொள்ள போலீ ஸார் அனுமதியளித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா கடந்த டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், எனவே நீதி விசாரணை நடத்த வேண்டு மெனவும் வலியுறுத்தி முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் நாளை (மார்ச் 8) தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தனது ஆதர வாளர்களுக்கு அழைப்புவிடுத்துள் ளார்.

இதற்காக சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நடக்கவுள்ள உண்ணாவிரதத் துக்கு சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் அனுமதி கோரப்பட்டது. நேற்று காலை வரை அனுமதி அளிக்கப்படாத நிலையில் கே.பி.முனுசாமி தலைமையில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் போலீஸ் ஆணையர் ஜார்ஜை சந்தித்துப் பேசினர்.

இதையடுத்து ஓ.பன்னீர்செல் வம் தலைமையில் நாளை உண்ணாவிரதம் இருக்க எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் போலீஸார் அனுமதியளித்துள்ளனர்.