ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளைமறுநாள் பந்த் போராட்டம் அறிவிப்பு

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்குதடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமைபுதுச்சேரியில் பந்த் (முழு அடைப்பு) போராட்டம் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டாஅமைப்பை தடை செய்ய வேண்டும், அலங்காநல்லூரில்போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை விடுவிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திதமிழகம் முழுவதும் பல இடங்களில் போராட்டங்கள்நடந்து வருகின்றன.

புதுவையிலும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 2 நாள்களாக தீவிர போராட்டங்கள்நடத்தப்பட்டு வருகின்றன. கடற்கரையில் கல்லூரி மாணவர்கள் கண்டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள், இளைஞர்கள் குவிந்து போராட்டம்நடத்தி வருவது போல், செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஏஎப்டி மைதானத்தில்நூற்றுக்கணக்கான இளைஞர்கள் குவிந்தனர்.

தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக இளைஞர்கள், பல்வேறு சமூக அமைப்பினர்கொட்டும் பனியையும் பொருள்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரிமாணவ, மாணவியரும் புதன்கிழமை காலை முதலே போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

பந்த் நடத்த அழைப்பு

இந்நிலையில் ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக போராளி இயக்கம் சார்பில் பந்த்போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆலோசனைக்கூட்டம் பாரதி பூங்காவில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறுஇயக்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திவரும் 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த்போராட்டம் நடத்த வேண்டும். மேலும் 7 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தவும்தீர்மானிக்கப்பட்டது.

தமிழ் உணர்வுக்காக நடத்தப்படும் பந்த், மறியல் போராட்டங்களுக்காக அனைத்து தரப்புமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என இயக்க ஆலோசகர் புரட்சிவேந்தன்தெரிவித்தார்.