- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.
மலேசியா-
– ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.