ஜல்லிக்கட்டுக்கு எதிராக மேனகா காந்தி வழக்கு தொடர்ந்ததாக வெளியான செய்தி பொய்யானது

புதுடெல்லி,
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை போலீசார் கலைந்து செல்ல கோரியதை அடுத்து சென்னையில் சில அசம்பவாவித சம்பங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய மந்திரியும், பாரதீய ஜனதா தலைவருமான மேனகா காந்தி வழக்கு தொடர்ந்து உள்ளதாக செய்திகள் வெளியாகியது. இது தொடர்பான மீம்ஸ்-க்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது, விமர்சனங்களும் எழுந்தது. இச்செய்தியானது தவறாக பரப்படுகிறது என செய்தியாளர்கள் தரப்பிலும் சமூக வலைதளங்களில் தெரிவிக்கப்பட்டது. இப்போது மேனகா காந்தி எதிர்ப்பு என்ற செய்தியானது முற்றிலும் பொய்யானது என மற்றொரு மத்திய மந்திரி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெளிவு படுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், “சில நிமிடங்களுக்கு முன்னதாக மேனகா காந்தியிடம் தொலைபேசியில் பேசினேன், அவர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க கோரி சுப்ரீம் கோர்ட்டு செல்லவில்லை என்றார். மீடியாக்களில் வெளியான செய்திகள் பொய்யானது,” என்று கூறிஉள்ளார்.