- மன்னித்து விடுங்கள் என்று ரணில் கூறியதன் அர்த்தம் என்ன?
- இந்தியா எடுக்கும் அனைத்தும் நடவடிக்கைகளுக்கும் மிகச் சிறந்த நட்பு நாடு என்ற அடிப்படையில் இஸ்ரேல் ஆதரவு அளிக்கும்
- நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்கள் ஒதுக்கீடு
- பேருந்தில் பணிக்கு செல்லும் இலங்கையின் முன்னாள் அமைச்சர்
- கழிவறை பேப்பரை தேடினால் பாகிஸ்தான் கொடி: ஹைஜேக் செய்யப்பட்ட கூகுள் தேடல்

ஜலந்தர் கத்தோலிக்க பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார்: கேரள போலீசார் சம்மன்
பலாத்கார புகாருக்குள்ளான பேராயருக்கு வரும் 19ம் தேதி ஆஜராகும்படி கேரள போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திரி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் பிராங்கோ முலக்கல் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீதி கிடைக்க வலியுறுத்தி, சக கன்னியாஸ்திரிகள் 5 பேர் உள்பட ஏராளமானோர், கொச்சியில் கடந்த 5 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி, டில்லியில் உள்ள வாடிகன் தூதரகத்தின் இந்திய பிரதிநிதி கியாம்படிஸ்டா டிகுவாட்ரோவுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டுவரை, பேராயர் முலக்கல், என்னை பலாத்காரம் செய்தார். . தற்போது நான் புகார் கொடுத்துள்ளேன். பேராயர் முலக்கலை நீக்க வேண்டும். அவர் தனது செல்வாக்கையும், பணபலத்தையும் பயன்படுத்தி, விசாரணையை முடக்க முயன்று வருகிறார். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.
கன்னியாஸ்திரியின் சகோதரர் கூறுகையில், பேராயர் முல்லக்கல், மற்றும் இரண்டு பேர் எனது நண்பரை அணுகி, பலாத்கார புகாரை திரும்ப பெற்று கொண்டால் ரூ.5 கோடி தருகிறோம் என தெரிவித்தனர் என்றார்.
பலாத்கார வழக்கு நாளை(செப்.,13) கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், பேராயரிடம் விசாரணை நடத்தப்பட்டதா, அதன்பிறகு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தது. இதனையடுத்து, இன்று(செப்.,12) போலீசாரின் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. வரும் 19ம் தேதி ஆஜராகும்படி பேராயருக்கு சம்மன் அனுப்புவது என இதில் முடிவு எடுக்கப்பட்டது.
கடந்த மாதம் போலீசார், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில், 2014 மே முதல் 2016 செப்., வரை பேராயர் தனது பதவியை பயன்படுத்தி பல முறை கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளனர். கடந்த மாதம் ஜலந்தர் சென்று பேராயரிடம் விசாரணை நடத்திய போலீசார், அவர் தெரிவித்த தேதிக்கும், கன்னியாஸ்திரி தெரிவித்த தேதிக்கும் வித்தியாசம் உள்ளதாக தெரிவித்தனர்.
பேராயருக்கு ஆதரவு தெரிவித்த ஜலந்தர் டயோசிஸ், கன்னியாஸ்திரி பழிவாங்கும் நோக்கில் புகார் தெரிவித்துள்ளார். தனது கணவருடன் கன்னியாஸ்திரிக்கு தொடர்பு உள்ளதாக பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். இது குறித்து பேராயர் விசாரணை நடத்தியதால் அவர் புகார் கூறியுள்ளார். கன்னியாஸ்திரி குறிப்பிட்ட தேதியில், பேராயர் குருவிலாங்காடு பகுதியில் தான் தங்கியிருந்தார். முதல்முறை பலாத்காரம் செய்யப்பட்ட பின் ஏன் அவர் புகார் கூறவில்லை. தேவாலயத்திற்கு எதிராக சதி செய்பவர்கள், கன்னியாஸ்திரிகளை தூண்டிவிட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பின்னணியில் பலர் உள்ளதாக கூறியுள்ளது.