ஜனாதிபதி மைத்திரி பதவியேற்பின் நான்காண்டு பூர்த்தியை முன்னிட்டு பிரித் ஓதும் வைபவம் இடம்பெற்றது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று நான்கு வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதிக்கு ஆசி வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட பிரித் பாராயண நிகழ்வு கடந்த செவ்வாய் அன்று இரவு முதல் புதன் அதிகாலை வரை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஹ_ணுபிட்டிய கங்கா ராம விகாராதிபதி சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜிதேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் பங்கு பற்றுதலுடன் இந்த பிரித்பாராயண நிகழ்வு இடம் பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேன இங்கு இடம் பெற்ற சமய உரையை செவிமடுத்தார். புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா உள்ளிட்ட அமைச்சர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதேநேரம் புதன் காலை மகாசங்கத்தினருக்கான அன்னதான நிகழ் வொன்றும் இடம்பெற்றது. சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக் குரிய கலாநிதி இத்தேபானே தம்மாலங்கார தேரர், ஸ்ரீலங்கா அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர், அக்கமகா பண்டித சங்கைக்குரிய கொட்டு கொட தம்மாவாச மகா நாயக்க தேரர், சங்கைக்குரிய கொடபொல அமரகீத்தி தேரர், சங்கைக்குரிய திருக்குணா மலயே ஆனந்த தேரர், சங்கைக்குரிய அக்குரட்டியே நந்த தேரர், களனி ரஜமகா விகாரையின் விகாராதிபதி பேராசிரியர், கொள்ளுபிட்டியே மகிந்த சங்க ரக்கித்த தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினரும் இங்கு வருகை தந்திருந்தனர்.
ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவி ரத்ன உள்ளிட்ட ஜனாதிபதி அலுவலக பணிக்குழுவினரால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.