ஜனாதிபதி சட்டத்தரணி நியமனம் சூடப்பட்டதால்,சுமந்திரன் தொடர்ந்தும் ஜனாதிபதி“பக்கம்”தானா?

இலங்கையில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் வர்த்தகத்தில் கொடி கட்டிப் பறப்பவர்கள் என்ற மூன்று வகையினருக்கும் வாழ்க்கைப் பிரச்சனை என்பதே இல்லை. அவர்களது பதவி, பணம், அதிகாரம், சலுகைகள் அனைத்தும் அவர்களுக்கு சுகபோக வாழ்வையே தொடர்ந்தும் தந்தவண்ணம் இருப்பன. ஆனால் இங்கே நாம் குறிப்பிடாத ஏனைய மக்கள் தொழிலாளர்கள் விவசாயக் கூலிகள், இடைத்தர அல்லது கனிஸ்ட தர அரச உத்தியோகத்தர்கள் அனைவருக்குமே தங்கள் குடும்பங்களின் சுமை அவர்களை சின்னாப்பின்னப் படுத்திய வண்ணமே இருக்கும் என்பது நிச்சயம்.

மறு பக்கத்தில் வடக்கு கிழக்குப் பகுதிகளில் காணமற்போன உறவுகளை இழந்து தவிக்கும் அவர்களைப் பெற்றவர்கள், மணம் முடித்தவர்கள் என்ற உறவுநிலையை உடையவர்கள், தங்கள் காணிகளை இராணுவம் அபகரித்துள்ளமையால் வாழ்க்கையும் நாளாந்த நடவடிக்கைகளும் இழக்கப்பட்ட நி லையில் விரக்தியான மனங்களோடு வாழ்க்கையை கடத்தும் இன்னோர் பிரிவினர், பல்கலைக் கழகப் பட்டங்களை சிரமப்பட்டு கற்றுபெற்றுக்கொண்ட பின்னரும் தொழில் ஏதும் இல்லாமல் வாழுகின்ற பட்டதாரிகள. இவ்வாறு திறந்த வெளிகளிலும் முகாம்களுக்குமுன்பாகவும் வீதியோரங்களிலும் நின்றுபோராடியவண்ணம் உள்ளவர் சாதாரண மக்கள் தினமும் துன்பக் கடலில் ஆழ்ந்து போகின்றனர்.

ஆனால் அரசியல்வாதிகள் எவருக்கும் மேற்க் கூறப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு பிரச்சனைகளைத் தீர்க்கவோ அன்றி அவர்களது மனக்கஸ்டங்களை தீர்க்கும் வகையிலஆறுதல் சொலலவோ நேரம் கிட்டுவதாகத் தெரியவில்லை. மாறாக தங்கள் சுய நலன்களையும் சுகபோகத்தையும் தீவிரமாக நேசித்தவண்ணம் அவர்களதுஅரசியல் வாழ்க்கையும் பொது வாழ்க்கையும் நாட்களை நகர்த்துகின்றன.

குறிப்பாக தமிழ் அரசியல்வாதிகளை எடுத்துக்கொண்டால் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் அவர்கள்; தொடக்கம் சாதாரண பாராளுமன்ற உறுப்பினர்கள் வரை (இவர்களில் சில எம்பிக்களுக்கு விதிவிலக்கு வழங்க வேண்டும்) பாதிக்கப்பட்ட மக்களைச் சென்று சந்திப்பதாக தகவலே இல்லை. சம்பந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லம் தற்போதுஅரச செலவில் ஐந்துகோடி ரூபா செலவில் திருத்தி அமைக்கப்படுகின்றது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சிலஅரசாங்க சலுகைகள் கிட்டியுள்ளன.

தற்போது பிந்திக் கிடைத்த செய்தி ஒன்றின்படி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு “ஜனாதிபதி சட்டத்தரணி” என்னும் “மகுடம்” சூடப்பட்டுள்ளது. .இந்த நியமனங்களை வழங்கிய ஜனாதிபதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்புஒன்றில் மேற்படி நியமனங்கள் வழங்கப்பட்டதற்கான காரணங்களை சொல்லுகின்றபோது “சட்டத்துறையில் மிகுந்தவல்லமையுடன் சிறப்புக்களைச் செய்தவர் மற்றும் நேர்மையாக செயற்பட்டவர்கள் இவர்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சுமந்திரனின் அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளில் நேர்மைத் தன்மை உள்ளதா என்பதை அங்குள்ள சாதாரண தமிழ் மக்களிடம் தான் கேட்டறிய வேண்டும். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தகாலம் தொடக்கம், திருசம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற நாள் தொடக்கம், திரு சுமந்திரன் அரசாங்கத்தின் பக்கமே நின்று கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதும் அசாங்கத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்துவதாகவுமே செயற்பட்டு வருகின்றார். அவ்வாறானால் இந்த ஜனாதிபதி சட்டத்தரணி என்னும் மகுடத்தோடு அவர் தொடர்ந்தும் ஜனாதிபதி பக்கமே நிற்பார் என்றேநாம் எதிர்பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவலல “தைரியம்” தொடர்ந்து அவரிடத்தில் இல்லாதிருக்கும் என்பதே நிச்சயம்.