சேவலும் மயிலும் வாழ்க! திருக்கை வேல் வாழ்க!!

கனடா ஸ்காபுறோ நகரில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று நடைபெற்ற “சூரஹம்சாரப் பெருவிழா” அனைவருக்கும் உற்சாகம் தரும் வாணவேடிக்கையும் அன்றைய “சூரஹம்சாரப் பெருவிழா” வில் ஒரு முக்கிய அங்கமாக விளங்கியது.

உள் வீதியிலும் ஆலயத்தின் முகப்பிலும் குளிரின் மத்தியிலும் பக்தர்கள் இந்தப் பக்திப் ” போரை” நடத்தி பெரும் நிறைவு கொண்டனர்.

ஆலயத்தின் பிரதம குரு சிவஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் தலைமையிலும் சிவஶ்ரீ சோமஸ்கந்தக் குருக்கள் வழிகாட்டலிலும் அதிகளவு உதவிக் குருமார்கள் இ ந்த பக்திப் போருக்கு உயிர் கொடுத்தனர்.

வர்த்தகப் பெருமகன் திரு குலா செல்லத்துரை தம்பதி இந்த திருவிழாவின் முக்கிய உபயகாரராக விளங்கினார்கள்