செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி

Solo Dance Event by Miss Swetha Pararajasingam was a successful one. Swetha is a Student and daughter of Mrs Nirothini Pararajasingam, Founder of Nirthiya Kalanjali Academy of Fine Arts.
Madhurai Sri Muraleetharan Master and his musicians team played an important role of this Solo Dance.

Swetha was given a title today Youth Advocate, by Harvard University Tamil Chair Inc Dr. Sampantham, Mr (Writer) A. Muthulingam and Mr. Sivan Ilango jointly presented the Certificate to Swetha Nirothini Pararajasingam

மாலை ஸ்காபுறோ ஆர்மேனியன் இளைஞர் கழகத்தின் கலா மண்டபத்தில் நடைபெற்ற செல்வி சுவேதா பரராஜசிங்கத்தின் முழு நீள தனி நடன நிகழ்ச்சி சிறப்பாக நிறைவுற்றது.
அவரது குருவும் அன்னையுமாகிய திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் வழிகாட்டலில் மதுரை ஆர் முரளிதரன் மாஸ்டர் நாட்டியச் செல்வி சுவேதாவிற்கு வழங்கிய பயிற்சி இன்று அவரை ஒரு பரிபுரணமான நர்த்தகியாக எமக்கு அடையாளம் காட்டியது.

அமெரிக்காவின் ஹாவார்ட் பல்கலைக் கழகத்தின் சார்பில் பல்கலைக்கழகத்தின் இளைஞர் குழு பரப்புரையாளர் என்று விருது செல்வி சுவேதாவிற்கு மேடையில் வைத்து வழங்கப்பட்டது

திருவாளர்கள் டாக்டர் சம்பந்தம், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் மற்றும் சிவன் இளங்கோ ஆகியோர் மேற்படி விருதினை நாட்டியச் செல்வி சுவேதா பரராஜசிங்கத்திற்கு வழங்கிக் கௌரவித்தார்கள்.