செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்

கனடாவில் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் சிறப்புற நடைபெற்ற நடனச் செல்விகள் நிசாரா மதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம்.
கனடாவில் கலைக்கோவில் நுண்கலைக் கல்லூரியின் ஸ்தாபகரும் இணை அதிபருமான திருமதி வனிதா குகேந்திரன் அவர்களின் மாணவிகளும் திரு திருமதி வதனகுமாரன் தம்பதியின் குமாரிகளுமான நடனச் செல்விகள் நிசாரா வதனகுமாரன் அஞ்சலி மதனகுமாரன் ஆகியோரின் பரத நாட்டிய அரங்கேற்றம் மார்க்கம் நகரில் உள்ள மார்க்கம் தியேட்டர் மண்டபத்தில் இன்று சிறப்புற நடைபெற்றது.
பக்தவாத்திய கலைஞர்களாக அவுஸ்த்திரேலியாவிலிருந்து வருகை தந்த பாடகர் திரு அகிலன் சிவானந்தம், மிருதங்கக் கலைஞர் திரு குகேந்திரன்,வயலின் வித்துவான் ஶ்ரீமதி தனதேவி மித்ரதேவா, வீணக்கலைஞர் ஶ்ரீமதி பிரபா தயாளன் மற்றும் சாகித்தியன்-கடம் கலைஞர் ஆகியோர் தங்கள் பங்களிப்பை சிறப்பாகவும் இனிதாகவும் வழங்கினார்கள்.
சிறப்பு விருநதினர்களில் ஒருவராக கலந்து கொண்ட கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் திரு ஆர். என். லோகேந்திரலிங்;கம் தனது உரையில் “பொதுவாகவே இவ்வாறான அரங்கேற்றங்கள் எந்த மண்டபத்தில் நடைபெற்றாலும் அவை ஒரு ஆலய மண்டபத்திலே யே நடைபெறுகின்றன என்பதை நான் உணர்வேன். ஏனென்றால் பரதம் ஒரு தெய்வீகக் கலை. அதைப்போலவே கர்நாடக இசையும் ஒரு தெய்வீக ஓசை.. இவையிரண்டும் எம்மை கடவுளுக்கு அருகில் கொண்டு செல்லக் கூடியன.
இன்றைய நடனச் செல்விகளின் ஆற்றலை நாம் சாதாரண நடன உருபபடிகளில் கண்டு மகிழவில;லை. அவர்களது குரு வனிதா குகேந்திரன் அவர்களின் அபாரச் சிந்தனையின் விளைவாகக் தோன்றிய உன்னத கருப்பொருளாம் சிலபபதிகாரத்தின் மூலம் இன்றைய தினம் வெளிப்பட்டன” எனறார்
நடன விரிவுரையாளர் திருமதி உமா மற்றும் நகரசபைக் கவுன்சிலர் திரு லோகன் கணபதி ஆகியோரும் உரையாறறினார்கள். திரு சுதர்சன் நிகழ்ச்சியை சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.