செல்வன். சண்முகநாதன் இராமமூர்த்தி ஸ்தபதி (சண்முகா)

16ம் நாள் நினைவஞ்சலியும்,நன்றி நவிலலும்

(தாவடி, வண்ணார்பண்ணை, கொழும்பு)
தோற்றம்:- 10-07-1981 மறைவு:- 15-02-2017
நாட்கள் நகர்ந்தது, நாடியோ கை விட்டது
நாம் மூச்சு திணறி திக்கற்ரவர்களாக நிற்கின்றோம்
விதி என்று சொல்வதா, காலன் செய்த சதி என்று சொல்வதா?
பெற்றவர், சகோதரிகள் துடிக்க, மற்றவர் அழுது புலம்ப
நீயோ நிரந்தர நித்திரையாகிவிட்டாயா!
அன்னையோ பல கனவுகளை சுமந்த வண்ணம்
உன்னை பார்ப்பதற்கு ஓடி வந்தாள்
நீயோ அவசர அழைப்பில் சென்று விட்டாயா...
காலம் வரும் வரை உன் பாதம் தொழுது பின் தொடர்வோம்...


எங்கள் அன்பு மகனின் துயரச்செய்தி அறிந்து உடன் இங்கு வீட்டுக்கு வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், மற்றும் கொழும்பில் சகல நிகழ்வுகளில் கலந்து கொண்டவர்களுக்கும், 16ம் நாள் நினைவு நாளில் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உன் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கும் அப்பா, அம்மா, அம்மம்மா, சகோதரிகள், மைத்துனர், மாமா, சித்தப்பா, சித்திமார், அத்தைமார் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள்.

தொடர்புகளுக்கு

ரூபன் - பிரியா (சகோதரி)
(647) 852-3256
கஜன் - பத்மா (சகோதரி)
(647) 571-4766