- தலைமை செயலர், டிஜிபி டில்லிக்கு அவசர பயணம் ஏன் ?
- உலகம் செய்தி 20 ஆப்ரிக்க நாடுகளுக்கு தடுப்பு மருந்து சென்று சேரவில்லை
- பெட்ரோல், டீசல் விலை குறித்து மோடி ஏன் பேசுவதில்லை
- நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி
- ஓட்டு எண்ணும் மையங்களில் கண்காணிப்பு: தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு
சென்னை விமான நிலையத்தில் கிடந்த மர்ம சூட்கேசால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதி 2-வது நுழைவு வாயில் அருகே கார்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்லும் ‘போர்டிகோ’ பகுதியில் நேற்று ஒரு சூட்கேஸ் கேட்பாரற்ற நிலையில் கிடந்தது.
இதனை மத்திய தொழிற்படை போலீசார் மற்றும் விமான நிலைய போலீசார் கண்டனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த சூட்கேசை யாரும் சொந்தம் கொண்டாட வரவில்லை. இதனால் அந்த மர்ம சூட்கேசின் உள்ளே வெடிகுண்டு இருக்குமோ? என்ற பீதி ஏற்பட்டது.
வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
உடனடியாக இதுபற்றி வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள், மர்ம சூட்கேஸ் இருந்த பகுதியை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தினர்.
பாதுகாப்பு கவசம் அணிந்த வெடிகுண்டு நிபுணர் அந்த மர்ம சூட்கேசை சோதனை செய்த போது, அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. அதன் பின்னரே அனைவரும் நிம்மதி அடைந்தனர். பின்னர் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் துணிகள் இருந்தது.
விமானத்தில் வந்த பயணி யாராவது அந்த சூட்கேசை மறந்து போய் விட்டுச்சென்று இருக்கலாம் என தெரியவந்தது. அந்த சூட்கேஸ் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.