சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் பணியிட மாற்றம்: தேர்தல் ஆணையம் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி  சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ்ஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  தேர்தல் கமிஷனிடம் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில்,  எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை மாநகர காவல் துறை ஆணையர் ஜார்ஜ்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய காவல்துறை ஆணையராக யார் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் 3-வது முறையாக மாற்றப்பட்டுள்ளார்.  இறுதியாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜார்ஜ் காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றிருந்தார்.