- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

செக் மோசடி வழக்கு; பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மோகன் பாபுவுக்கு ஒரு வருட சிறை தண்டனை
தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக இருப்பவர் மோகன் பாபு. திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். இவர் ஸ்ரீலட்சுமி பிரசன்னா பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார்.
இவரது படநிறுவனத்தின் தயாரிப்பில் சலீம் என்ற தெலுங்கு படம் உருவானது. இதில் மஞ்சு விஷ்ணு, இலியானா டி குரூஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு டிசம்பரில் படம் வெளியானது. இதனை இயக்கியவர் தேவதாசு பட புகழ் இயக்குநர் ஒய்.வி.எஸ். சவுத்ரி.
இவருக்கு சேர வேண்டிய சம்பள தொகை ரூ.1.60 கோடிக்கு பதிலாக ரூ.1.10 கோடி பணம் தரப்பட்டு உள்ளது. ரூ.40.50 லட்சம் தொகைக்கு மோகன் பாபு காசோலை தந்துள்ளார்.
ஆனால் பணமின்றி காசோலை திரும்பி வந்து விட்டது. இதுபற்றி வழக்கு பதிவானது. இதன்மீது நடந்த விசாரணையில் சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் செக் மோசடி வழக்கில் நடிகர் மோகன் பாபுவுக்கு 1 வருட சிறை தண்டனை வழங்கி உள்ளது. ரூ.41.71 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்பின் மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்ய ஒரு மாத காலஅவகாசம் அளித்து உத்தரவை நீதிபதிகள் தற்காலிக ரத்து செய்துள்ளனர்.
ஆந்திர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் நடிகர் மோகன் பாபு சமீபத்தில் தன்னை இணைத்து கொண்டார்.