சுஷ்மா சுவராஜ் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும்: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்

மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், உடல்நிலைக் கோளாறு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த 19ம் தேதி அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் அவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கடிதம் எழுதியுள்ளார்.

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து கடந்த சில தினங்களாக மருத்துவமனையிலேயே இருந்து வந்த அவர் சிகிச்சை முடிந்த பின் சுஷ்மாவின் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனையும் தெரிவித்து வந்தது.

இந்நிலையில், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட சுஷ்மா சுவராஜ், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.