- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சுவிஸ் வாழ் பத்திரிகையாளர் இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்” நூல் வெளியீட்டு விழா
இரா துரைரத்னம் அவர்களின் “செய்திகளின் மறுபக்கம்”நூல் வெளியீட்டுவிழா சுவிஸ் ஃசெங்காளன்ஃசென் மாக்கிறட்டன் நகரில் ஸ்ரீ கதிர்வேலாயுதர் ஆலயத்தில் கடந்த சனிக்கிழமை (08.09.2018)மிகச்சிறப்பாக நடைபெற்றது. காலை பத்து மணிக்குத் தொடங்கிய விழாவை பலரும் கலந்து கொண்டு சிறப்பித்துச் சென்றமை முக்கிய விடயமாக அங்கு பேசப்பட்டது.
ஆங்கு உரையாற்றிய எழுத்தாளர் கல்லாறு சதீஸ் அவர்கள் தனது உரையில் பின்வருமாறு அவரைப் பாராட்டினார் “ இங்கு வாழும் அனைவரும் வருகை தந்து நிறைத்தது,ஒரு தமிழ் ஊடகவியலாளருக்குச் சமூகம் வழங்கிய என்றே இன்றைய நிகழ்வை நான் பார்க்க்pன்றேன். நூல்கள் என்பது மொழியின் மானம் என்றார்.
எனது ஆசான் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள்.எமது மொழியின் ஆடை நெய்ய நூல் செய்த இரா துரைரத்தினம் அவர்களை மனதார பாராட்டுகிறேன்.சமூகம் ஒருமித்து மகிழ மேலும் பல படைப்புகளை அவர் எதிர்காலத்திலும் வழங்க வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்” என்று தனது உரையை எழுத்தாளர் கல்லாறு சதீஸ் நிறைவு செய்தார்.