சுவிட்சர்லாந்த் நாட்டில் நகரசபைக் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகாவிற்கு சென்னையில் பாராட்டு விழா

உலகின் பலநாடுகளில் தமிழர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் முன்னேறி வருகின்றனர். பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும் பொருளாதாத்திலும் மேம்பாடு கண்டு அவர்கள் வாழும் நாடுகளின் அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளனர். அந்த வகையில் சுவிட்சர்லாந்த் நாட்டில் பேர்ன் நகரில் தூன் மகாணத்தில் ஈழத்தமிழ்ப் பெண் டர்ச்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் தேர்வு செய்யப்பட்டு அங்கு சேவையாற்றிவருகின்றார. இவர்தான் அங்கு முதன் முதலாக தெரிவாகிய தமிழ் பேசும் பெண் கவுன்சிலர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தப் பெருமையோடு இவர் அண்மையில் தமிழகம் வருகைதந்தார் இவ்வருகையை முன்னிட்டு இனிய நந்தவனம் சஞ்சிகை ஏற்பாட்டில் சென்னை மகாகவி பாரதி நகர் கிளை நூலக வாசகர் வட்டம் கல்வெட்டு பேசுகிறது மாத சஞ்சிகையுடன் இணைந்து 18 | 04 | 2018 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது

கவிஞர் சொர்ண பாரதி தலைமையில் புலவர் மு.அரங்கநாதன் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது
பாராட்டுப்பெற்ற டர்ச்சிகா தனது ஏற்புரையில் தமிழகம் எனது தொப்புள் கொடி உறவுகளின் தேசம் இங்கே வருகின்ற ஒவ்வொரு முறையும் அக மகிழ்ச்சியடைவேன்
நான் கவுன்சிசிலரான பின் இப்போதுதான் முதல் முறையாக தமிழகம் வருகிறன் இப்படியான பாராட்டு விழாவில் கலந்துகொள்வதும் என் தமிழ் உறவுகளுடன் கலந்துரையாடுவதாலும் நிறையஅனுபவங்களை கற்றுக்கொள்கிறேன். எனக்கு ஒரு கவலை இருக்கிறது நாங்கள் புலம் பெயர்ந்த நாட்டில் எங்களுக்கு குடியுரிமை வழங்கியுள்ளனர் அதன் பயனாகபல் துறைகளில் சாதித்து தற்போது அரசியலிலும் பயணிக்கத் தொடங்கியுள்ளோம் ஆனால் 30 ஆண்டுகளாக இந்தியாவில் இருக்கக் கூடிய ஈழத்தமிழர்களுக்கு இன்னும் குடியுரிமை வழங்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்று எதிர்பார்கிறேன் மேலும் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழ் நூலகம் அமைக்க வேண்டும் என்று இங்கே கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது அதற்கான முயற்சியை எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன் டர்ச்சிகா தனது ஏற்புரையில் தெரிவித்தார்

மேலும் விழாவில் வே.எழிலரசு, முனைவர் தமிழ் மணவாளன், கவிஞர் நா.பாபுபா.ஹேமாவதி, முனைவர் வசந்தா, கவிஞர் ஜலாலுதீன், கலாநிதிவே.த.யோகநாதன், பத்திரிகையாளர் கோமபுரம் இரா.ப .சந்திரகேரன் தாமரைப் பூவண்ணன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் சமூக செயல்பாட்டாளர் குமரன், திருச்சி விம்ராபேக்ஸ் உரிமையாளர் சாதிக் பாட்சா ஆகியோர் நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்தனர் முன்னதாக நந்தவனம் சந்திரசேகரன் அனைவரையும் வரவேற்க நூலகர் பெ.கனகராஜ் நன்றி கூறினார்