சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம்

கின்னஸ் உலக சாதனைகளின் தமிழ் பேசும் நாயகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் உலக சமாதானத்திற்காக மேற்கொண்ட அகில உலக நாடுகளுக்கான ஓட்டம் ரொரென்ரோ குயின்பார்க் மாகாணப் பாராளுமன்றம் முன்பாக நிறைவு பெற்றது.

இதுவரை 69 கின்னஸ் சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சி நடைபெற்றுக்கொள்ளது.

இதுவரை 69 கின்னஸ் உலக சாதனைகளை நிலைநாட்டிய கனடா வாழ் ஈழத் தமிழ் மகன் சுரேஸ் ஜோக்கிம் அவர்களின் மற்றுமோர் உலக சாதனைக்கான முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

இந்த சாதனை முயற்சியானது இன்னுமோர் நோக்கத்திற்காகவும் நிகழ்த்தப்படுகின்றது என்பது மிக முக்கிய விடயமாகும்.

உலக சமாதானத்தை வலியுறுத்தியும் உலகின் அனைத்துப் பாகங்களிலும் போர்களை நிறுத்தக் கோரியும் இந்த உலக நாடுகளில் தனது பல்லாயிரம் கிலோ மீற்றர்கள் ஓட்டத்தில் சுரேஸ் ஜோக்கிம் அவர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலிருந்து இறங்கியுள்ளார்.

உலக நாடுகள் பலவற்றையும் அடுத்து அமெரிக்காவிலும் தொடர்சசியான ஓட்டத்தில் ஈடுபட்ட அ வர் அமெரிக்காவிலிருந்து மொன்றியால் நகருக்கு வந்து சேர்ந்தார்.
பின்னர் கடந்த வாரம் ஒட்டாவா ஊடாக மார்க்கம் நகருக்கு வந்து அதனை நிறைவு செய்தார்

அதனைத் தொடர்ந்து நாளை சனிக்கிழமை பிற்பகல் மிசிசாகா மாநகரிலிருந்து தனது உலக ஓட்டத்தின் இறுதிப் பகுதியை ஆரம்பித்து ஒன்றாரியோ பாராளுமன்றமான குயின்ஸ்பார்க்கில் 4.00 மணியவில் வ்நதடைவார். அதன் பின்னர் பாராட்டுக் கூட்டமும் வரவேற்பும் இடம்பெறும்.

இங்கு காணப்படும் படத்தில் கடந்த வௌளிக்கிழமை மார்க்கம் நகரை வந்தடைந்த போது அவருக்:கு உதவியாக CAMSONICS SECURITY CAMERAS நிறுவன அதிபர் திரு ரஜீவ் செபராஜா மொன்றியால் நிறுவன அதிபர் திரு ராஜ்கோபால் முத்தையா மற்றும் கனடா உதயன் பிரதம ஆசிரியர் திரு ஆர் என். லோகேந்திரலிங்கம் ஆகியோர் உடன் ஓடுவதையும் காணலாம்.