சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாடலுமே நாடாலுமன்ற வாதிகளின் “நற்சிந்தனை” ஆகும்

பொதுவாகவே பாராளுமன்ற அரசியல் என்பது சுயநலமும் சுகபோகத்தை நோக்கிய நாட்டத்தைக் கொண்ட நாடாலுமன்ற வாதிகளின் கூடாரம் என்று பல ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த சுயநலமற்ற அரசியல்வாதிகளும், ஆயுதம் தாங்கிய போராட்டங்களை நடத்திய தலைவர் பிரபாகரன் போன்றவர்களும் பிடல் கெஸ்ரோ மற்றும் சேக்குவேரா போன்ற போராளித் தலைவர்களும் கூறிவந்தார்கள். மக்களும் அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களின் நடத்திய போராட்டங்களுக்கு தங்கள் ஆதரவை வழங்கிவந்தார்கள்.
இலங்கை அரசியலிலும் பல வருடங்களாக இந்த கூற்று உண்மையானது என்றே குறிப்பிடக் கூடியதான சம்பவங்கள் இடம்பெற்றன. ஆனால் அண்மைக்காலங்களில் இந்த கூற்று நூறு வீதம் நிதர்சனம் என்பதையே தற்போதைய நாடாளுமன்ற வாதிகளின் நடவடிக்கைகள் நிரூபிக்க முயலுகின்றன. மேலும் படிக்க…