- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்

சுனந்தா புஷ்கர் தற்கொலை: தூண்டியதாக சசிதரூர் மீது வழக்கு
முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் எம்.பி.,யான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பிறகு டில்லி போலீஸ் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இது வரை மர்ம மரணம் என குறிப்பிட்டு வந்த போலீசார், இன்று தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையில், சுனந்தா புஷ்கர் மரணம் தற்கொலை தான்; கொலை அல்ல என குறிப்பிட்டுள்ளனர். மேலும். சுனந்தாவை தற்கொலைக்கு தூண்டியதாக சசிதரூரின் பெயரும் குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கை நீதிபதி தர்மேந்திர சிங் முன் பட்டியாலா கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சசிதரூர், மனைவி சுனந்தாவை கொடுமைப்படுத்தி, தற்கொலை செய்து கொள்ள தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குற்றப்பத்திரிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு, சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.