சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்

சுதந்திர தின விழாவை, லடாக் தொகுதி பா.ஜ., எம்.பி., ஜம்யங் ஷெரீங் நம்ஜியால், நண்பர்களுடன் நடனமாடி கொண்டாடினார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, லடாக் தொகுதி எம்.பி.,யான பா.ஜ.,வை சேர்ந்த ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பேசினார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக லடாக் பகுதி வளர்ச்சி பெறவில்லை. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர், மாநிலத்தை, குடும்ப தொழிலுக்காக பயன்படுத்தினர். அந்தஸ்து நீக்கப்பட்டால், அவர்களின் தொழில் பாதிக்கப்படும் என்றார். அவரது பேச்சிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர். மேலும், அவருக்கு நாடு முழுவதும் புகழை ஏற்படுத்தி கொடுத்தது. சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

காஷ்மீர் மாநிலம் லேயில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜம்யங் பங்கேற்றார். பாரம்பரிய உடையுடன், வந்த அவர், நண்பர்களுடன் இணைந்து நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார்.

இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் லேயில் நடந்த சுதந்திர தின விழாவில் ஜம்யங் ஷெரீங் நம்ஜியால் பங்கேற்றார். அரக்கு நிறத்தில், லடாக் பகுதி ஆண்கள் அணியும் பாரம்பரிய உடையுடன், கண்ணாடியுடன் காணப்பட்ட அவர், நண்பர்களுடன் இணைந்து நடனமாடி சுதந்திர தினத்தை கொண்டாடினார். தொடர்ந்து பாரம்பரிய இசைக்கருவிகளையும் அவர் இசைத்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.