சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடு !!

திபெத் விவகாரத்தை மையப்படுத்தி அமெரிக்காவும் சீனாவும் விசா கட்டுப்பாடு என்ற புதிய யுத்தத்தை துவக்க உள்ளதாக அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று சம்பந்தமாக சீனா அமெரிக்கா இடையே பிரச்னை உச்சநிலையை அடைந்துள்ளது. இதன்காரணமாக இருநாடுகளும் வணிக ரீதியிலான பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

இந்நிலையில் திபெத் செல்லும் அமெரிக்கர்களுக்கு சீனா விசா மறுப்பது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ திபெத் பகுதிக்குள் செல்ல வெளிநாட்டினர் அமெரிக்கர்கள் சுற்றுலாபயணிகமள் பத்திரிகையாளர்களுக்கு சீன அதிகாரிகள் அனுமதி மறுத்தால் சீன அதிகாரிகளுக்கு அமெரிக்காவும் விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் விதிக்கும் என தெரிவித்து இருந்தார்.

மேலும்திபெத் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளுக்கு செல்ல அமெரிக்க அதிகாரிகள் , பத்திரிகையாளர்கள், சுற்றுலாபயணிகளுக்கு சீனா அனுமதி மறுக்கிறது. அதே நேரத்தில் சீன அதிகாரிகள் அமெரிக்காவிற்குள் சுதந்தரமாக வந்து பல்வேறு வசதிகளை அனுபவிக்கின்றனர். என பாம்பியோ கூறினார்.

இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோலிஜியன், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். திபெத் தொடர்பான பிரச்னைகள் சம்பந்தமாக சீனாவின் உள்நாட்டுவிவகாரங்கமளில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். மேலும் அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடி தரும் விதமாக திபெத் தொடர்பான பிரச்னைகளில் மோசமாக நடந்து கொள்ளும் அமெரிக்க அதிகாரிகள் மீது விசா கட்டுப்பாடுகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளதாக சீன அதிகாரி தெரிவித்தார்.