- நீதிபதிகள் மீது பொய் புகார் உச்ச நீதிமன்றம் கண்டனம்
- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததா? சீனாவில் மீண்டும் கொரோனா
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் வைரஸ் தலைகாட்ட துவங்கி உள்ளது.
கடந்த ஆண்டு, சீனாவில் முதன் முதலாக, வூஹான் நகரில் தான், கொரோனா வைரஸ் பாதிப்பு வெளிச்சத்திற்கு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம், இந்நகரில் கொரோனா பாதிப்பு அறவே இல்லை என, அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊரடங்கு விலக்கப்பட்டு, மக்களும் மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவில் நேற்று 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அதில் ஒருவர், வூஹான் நகரைச் சேர்ந்தவர். நோய் அறிகுறி இல்லாமல், 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 285 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, வூஹானில், அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.