சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து

சீனாவிலிருந்து, ஹஜ் யாத்திரைக்காக செல்லும் முஸ்லிம்களை சீன அரசு கண்காணித்து வருகிறது. இதற்காக, ஜிபிஎஸ் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி வருகிறது.

இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது: ‘மெக்கா டிராக்கிங் சாதனம்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் அட்டை, ஹஜ் யாத்திரைக்கு செல்லும் 11,500 முஸ்லிம்களில், மூன்றில் ஒரு பங்கினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில், சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள், ஜிபிஎஸ் வசதி இருக்கும். கழுத்தில் அணிந்து கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது, ஹஜ் யாத்திரை செல்பவர்களின் பாதுகாப்புக்காக தான் வழங்கப்படுகிறது. யாத்திரை சென்றவர்கள் வழி தெரியாமல் தவித்தால், இந்த சாதனத்தை பயன்படுத்தி அதிகாரிகள் அவர்களை மீட்க முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.