- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டம் !!
சீனாவிலிருந்து ரசாயன இறக்குமதியை நிறுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் மருந்து பொருட்கள், பூச்சி மருந்து தயாரிப்பு மற்றும் ரசாயனம் சார்ந்த தொழில்களுக்கு சீனாவில் இருந்து கெமிக்கல்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சீனாவிலிருந்து 75 வகையான ரசாயனங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது எல்லைப் பிரச்னை காரணமாக சீனாவுடன் மோதல் போக்கு நிலவுவதால் ரசாயன தேவைகளுக்காக அந்நாட்டை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி அமைக்க இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நடத்தப்பட்ட உயர்மட்ட ஆலோசனை கூட்டத்தில் உள்நாட்டு ரசாயன உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து உள்நாட்டில் ரசாயன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக உற்பத்தி செலவில் 10 சதவீதத்தை ஊக்கத் தொகையாக வழங்கவும் இந்திய அரசு முன் வந்துள்ளது. இதற்காக 5 ஆண்டுகளில் ரூ 25,000 கோடியை செலவிடவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.