சீனாவிலிருந்து அமெரிக்க செய்தியாளர்கள் வெளியேற்றம் – கொரோனா விவகாரத்தில் முற்றுகிறது மோதல்

கொரோனா வைரஸ் தொற்று, சீனா – அமெரிக்கா இடையேயான மோதலை, முற்றச் செய்துள்ளது.
latest tamil news

‘கடந்த ஆண்டு அக்.,ல் வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்’ என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாடால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது.

latest tamil news

சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, ‘சீன வைரஸ்’ எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை அங்கிருந்து வெளியேற்றியது ட்ரம்ப் அரசு.

latest tamil news

இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கப் பத்திரிகைகளான, ‘நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்’ ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த, சீனாவில் பணியாற்றும், 13 செய்தியாளர்கள், சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
சீனாவின் இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

@amyyqin

China is expelling all American journalists w/the NYT, WSJ & WaPo — myself included. So many feelings, but I keep coming back to my last trip, to Wuhan, where ppl were so willing to talk – they wanted the world to know what was happening to them and to hold their govt accountable https://twitter.com/amyyqin/status/1223279662127706113 

Amy Qin

@amyyqin

Just arrived in Wuhan, the epicenter of the coronavirus outbreak, which has been under lockdown for more than a week now. The mood among locals: anxiety, flashes of anger & frustration, and extreme boredom. Here I am getting my temperature measured in a hotel lobby.

View image on Twitter
10.6K people are talking about this