- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

சீனாவிற்கு வட கொரிய அதிபர் கிம் ஜோங் ரகசிய பயணம்
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், முதன்முறையாக சீனாவுக்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வட கொரிய அதிபர் கிம்ஜோங் உன், அவ்வப்போது அணு சோதனை மற்றும் ஏவுகணை சோதனையையும் மேற்கொண்டு வந்தார். இதற்கு ஐ.நா. பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் தென்கொரியா முயற்சியால் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை , வட கொரியா அதிபர் கிம் ஜோங் உன் அடுத்த மாதம் சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் கிம் ஜோங் உன், திடீரென சீனாவிற்கு ரகசிய பயணம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுவெளியிட்டுள்ள செய்தியில், வட கொரியா அதிபர் ரகசியமாக சீன வந்தார். கடந்த 2011-ம் ஆண்டு வட கொரியா அதிபராக பொறுப்பேற்ற கிம் ஜோங் உன், நாட்டைவிட்டு வெளியேறி எந்த நாடுக்கும் சென்றதில்லை. முதன்முறையாக சீன சென்றுள்ளார். அங்கு சீன அதிபர் மற்றும் பிரதமரை சந்திக்க உள்ளார்.
முன்னதாக அமெரிக்க அதிபர் டிரம்ப், தென்கொரிய அதிபர் மூன் ஜேயி ஆகியோரை சந்திக்க உள்ள நிலையில் சீன பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது.