சீனாவின் 2022 ஒலிம்பிக்கை புறக்கணிக்க நான்சி பெலோசி அழைப்பு

அமெரிக்க பிரதிநிதிகள் சபை சபாநாயகர் நான்சி பெலோசி சீனா நாட்டின் பெய்ஜிங்கில் நடைபெறும் 2022 குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணிக்க அழைப்பு விடுத்து உள்ளார். சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்து விமர்சித்து உள்ளார்.மேலும் இதில் கலந்து கொள்ளும் உலகளாவிய தலைவர்கள் தார்மீக அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும் போது நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் சென்று சீன அரசாங்கத்தை மதிக்க வேண்டாம்.நடந்துகொண்டிருக்கும் ஒரு இனப்படுகொலையின் வெளிச்சத்தில் நாட்டுத் தலைவர்கள் சீனாவுக்குச் செல்வது உங்கள் கவுரவ்த்திற்கு கேள்விக்குரியது என கூறி உள்ளார்.

சீன தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யூ ராய்ட்டர்ஸிடம், ஒலிம்பிக்கில் சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன என கூறி உள்ளார்.

சில அமெரிக்க அரசியல்வாதிகள் தங்களுக்கு உண்மையில் தார்மீக அதிகாரம் என்று அழைக்கப்படுவதை என்ன நினைக்கிறார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது? மனித உரிமைகள் பிரச்சினைகளில், சீனாவிற்கு எதிராக ஆதாரமற்ற விமர்சனங்களை முன்வைக்க அவர்கள் வரலாற்று ரீதியாகவோ அல்லது தற்போதுவோ எந்த நிலையிலும் இல்லை என்று கூறி உள்ளார்.