சீனாவின் குட்டை வெளிப்படுத்த முயன்ற பத்திரிகையாளர் கைது !!

கடந்த ஆண்டு டிச., மாதம் சீனாவின் ஒரு வூஹான் நகரத்தில் இருந்து கொரோனா வைரஸ் உலகிற்கு பரவியது. பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் குளிர்பதனப் பெட்டியில் இருந்து தவறுதலாக குப்பையில் கொட்டப்பட்டது.

இது அருகிலிருந்த இறைச்சி சந்தைக்கு சென்று வாடிக்கையாளர்கள் அதனை சாப்பிட்டு கொரோனா வைரஸ் அவர்களது நுரையீரலை பாதித்து உலகம் முழுவதும் பரவியது என்று சீன அரசு கூறுகிறது.
ஆனால் எதிரி நாடுகளின் பொருளாதாரத்தை சீர்குலைக்க சீனா திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பியதா என்ற கேள்வி எழுந்தது. இதனை அடுத்து கொரோனா தடுப்பு மருந்து சோதனை ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் கோரிக்கையை முன்வைத்தனர்.

தற்போது சீனாவில் பத்திரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சாங் சான் என்ற பெண் வழக்கறிஞர் மற்றும் பத்திகையாளர் கடந்த பிப்ரவரி மாதம் வூஹானுக்குச் சென்று அங்கு நடக்கும் நிகழ்வுகளை தனது செல்போன் மூலம் வெளியுலகுக்கு லைவ் ஸ்ட்ரீமிங் செய்துவந்தார்.

கொரோனா பரவலை சீன அரசு ஆரம்ப கட்டத்தில் வெளியுலகில் இருந்து மறைத்ததாக இன்னமும் குற்றச்சாட்டு உள்ள நிலையில் வூஹானில் என்ன நடக்கிறது என்று வெளியுலகுக்கு காட்ட அவர் முயற்சி மேற்கொண்டார். இதனை அடுத்து கடந்த மே மாதம் அவர் கலவரத்தை தூண்டுவதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.
வரும் டிசம்பர் 28-ஆம் தேதி இவர் ஷாங்காய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். சீன அரசின் அடக்குமுறையை எதிர்த்து இவர் கடந்த ஜூன் மாதம் உண்ணாவிரதம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.