“சி.இ.ஆர்.பி எல்லோருக்குக்ம் பயனளிக்கவேண்டும்” என்.டி.பி தலைவர் ஜக்மீத் சிங் – கண்டிப்பாக முடியாதென்கிறார் கனடிய பிரதமர் !!

புதன்கிழமை மற்றொரு அவசர நிதி உதவியை அறிவித்தபோது – இது மாணவர்களை இலக்காகக் கொண்டது என்றார் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ. யூனிவேர்சல் நிதி உதவித்திட்டத்தை உருவாக்கக்கூடாது என்ற தனது முடிவை ஆதரித்தார், இது COVID-19 பாதிப்புக்குள்ளான கனேடியர்கள் பயனகாமல் வீணாவதை தடுக்குமென்றார்.

COVID-19 காரணமாக நிதி நெருக்கடியில் இருக்கும் எந்தவொரு கனேடியனும் நன்மைகளுக்குத் தகுதிபெற அனுமதிக்க CERB இருக்கவேண்டுமென என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கூறினார்.

யார் கூர்வதை மக்கள் உண்மையில் ஆதரிக்கிறார்கள்? நீங்கள் என்ன கூறுகிறீர்கள் ?

“பல வாரங்களாக, அனைவருக்கும் நேரடி உதவியை வழங்குமாறு நாங்கள் அரசாங்கத்திடம் வற்புறுத்தி வருகிறோம்” என்று சிங் புதன்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்தார். “அது எளிது. அரசாங்கம் CERB ஐ எல்லோருக்கும் பயனளிக்கும் திட்டமாக மாற்றவேண்டும், இதனால் மாணவர்கள் மற்றும் உதவி தேவைப்படும் வேறு பல வர்க்கத்தினரும் தேவையான உதவியை இப்போதே அரசாங்கத்திடமிருந்து பெற முடியும். ” என்றும் என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் கூறினார்

ட்ரூடோ கூறுகையில், தனது அரசாங்கத்தின் அணுகுமுறை அதன் அவசர நிதி உதவியை நிலைகளில் மிகவும் தேவைப்படுபவர்களுக்கு கிடைக்கவேண்டுமென்பதையே செயல்படுத்தும். மாறாக தேவைப்படாதவர்கள் உட்பட அனைவருக்கும் ஒரே நேரத்தில் அவசர நிதி உதவி கொடுக்கவேண்டுமென்பதை தாம் ஆதரிக்கவில்லையென்றார்.

“உதவி தேவைப்படும் மில்லியன் கணக்கான கனடியர்கள் உள்ளனர். உதவி தேவையில்லாத மற்றவர்களும் உள்ளனர், ”என்று ட்ரூடோ புதன்கிழமை தேசத்திடம் தெரிவித்தார்.

“விரைவாக தேவைப்படும் மக்களுக்கு அதிகபட்ச உதவியை இலக்கு வைப்பதே இந்த செயல்முறையைத் தொடங்க சரியான வழி என்று நாங்கள் உணர்கிறோம்.” என்றார் கனடிய பிரதமர்.