சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் புதிய படத்துக்கு ‘விவேகம்’ தலைப்பு

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக சென்னை, ஹைதராபாத் மற்றும் பல்கேரியாவில் நடைபெற்று வந்தது. இரண்டாம் கட்டமாக மீண்டும் பல்கேரியாவுக்கு சென்று சில முக்கியமான காட்சிகளை படமாக்கியது படக்குழு.

காஜல் அகர்வால், விவேக் ஒபராய், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினரும் பல்கேரியா படப்பிடிப்பில் கலந்து கொண்டார்கள். இப்படப்பிடிப்பில் பைக் துரத்தல் காட்சிகளில் டூப்பின்றி சில காட்சிகளில் நடித்து படக்குழுவினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார் அஜித்.

இப்படத்துக்கு பெயரிடப்படாமல் படப்பிடிப்பில் தீவிரம் காட்டி வந்தது படக்குழு. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அஜித் உடலமைப்பை முழுமையாக மாற்றி நடித்துள்ள இப்படத்துக்கு ‘விவேகம்’ என தலைப்பிட்டுள்ளார்கள். பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூகவலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் ‘விவேகம்’ படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

வி என தொடங்கும் எழுத்து செண்டிமெண்ட் படி பெயர் வைத்து உள்ளனர்  சிவா இயக்கைத்தில் அஜித்தின்  வீரம் படம்  ஹிட் ஆச்சு. அடுத்து இவர்கள் கூட்டணி படம் வேதாளம். அதுவும் ஹிட் ஆச்சு. இப்போ பண்ணிட்டு இருக்கிற படம் அஜித்தின் 57 வ து படம். இதற்கு விவேகம் ன்னு பேர் வச்சி இருக்காங்க.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பை முடித்து, இறுதிகட்ட பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. ஜூனில் இப்படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.