சிலை மோசடி: இந்து அறநிலைய கூடுதல் கமிஷனர் கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் சோமாஸ்கந்தர் சிலை செய்தது தொடர்பான தங்க மோசடி செய்த விவகாரத்தில், இந்து அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் கவிதா என்பவரை, சென்னையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை, கும்பகோணம் சிலை கடத்தல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சோமாஸ்கந்தர் சிலை, ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்தது. சிலையில் சேதம் ஏற்பட்டதால், புதியதாக தங்க சிலை செய்யப்பட்டது. ஸ்தபதி முத்தையா என்பவரால் வடிவமைக்கப்பட்ட சோமாஸ்கந்தர் சிலைக்காக 100 கிலோ தங்கம் பக்தர்களிடம் திரட்டப்பட்டது. புதிய சிலையில் ஒரு துளிகூட தங்கம் இல்லை என்று புகார் எழுந்தது.