சிறையில் சசிகலாவை சந்தித்த முதல்வர், 4 அமைச்சர்களை தகுதியிழப்பு கோரி வழக்கு

தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்ரீவில்லிப் புத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ தாமரைக்கனி யின் மகன் டி.ஆணழகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில் கூறப் பட்டுள்ளதாவது:

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல் நலக்குறை வால் மருத்துவனையில் சேர்க்கப் பட்டு கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். அதன்பிறகு ஓ.பன்னீர்செல்வம் முதல்வரா னார். அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வானதும், அவரை முதல் வராக்கும் நோக்கத்துடன் பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு நிர்ப்பந்தப்படுத்தியதாகக் கூறப் படுகிறது.

இந்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற தால், எடப்பாடி பழனிசாமி முதல்வ ரானார். முதல்வரும், அமைச்சர் களும் பதவியேற்றபோது அரசிய லமைப்பு சட்டப்படி ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக்கொண்டனர். அதன்படி அரசின் ரகசியங்களை முதல்வரோ, அமைச்சர்களோ வெளியே யாருக்கும் தெரிவிக்கக் கூடாது.

ஆனால், அதிமுக செய்தித் தொடர்பாளர் கவுரிசங்கர், அதிமுக அரசு சசிகலாவின் ஆலோசனை, உத்தரவின் பேரில் நடைபெறு வதாக தெரிவித்தார். இதனை முதல்வரோ, அமைச்சர்களோ மறுக்கவில்லை. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், செல்லூர் கே.ராஜூ, திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.காமராஜ் ஆகி யோர் பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவை சந்தித்தனர். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து சசிகலாவுடன். விவாதித்த தாக அவர்கள் தெரிவித்தனர்.

இது அவர்கள் பதவியேற்கும் போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறியதாகும். இவர்கள் அரசின் ரகசியத்தை சசிகலாவுக்கு தெரிவிப்பவர்களாக உள்ளனர். எனவே முதல்வர் மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியிலிருந்து தகுதியிழப்பு செய்ய வேண்டும். இது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு மின்னஞ்சல் மற்றும் தபாலில் 13.3.2017, 16.3.2017-ல் மனு அனுப்பினேன். இதுவரை நடவடிக்கை எடுக்க வில்லை. எனவே, எனது மனு அடிப்படையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் 4 அமைச்சர்களை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதியிழப்பு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.