சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை: டிடிவி.தினகரன்

சிறையில் விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை என்று அதிமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அடையாறிலுள்ள டிடிவி. தினகரன் இல்லத்தில் இன்று (புதன்கிழமை) அவர் கூறும்போது, “சசிகலா ஷாப்பிங் செய்து வந்தது போல் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. உண்மையில் விதிமுறைகளை மீறி சிறையில் சசிகலாவுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. சிறையில் இருப்பவர்களை தேவை இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்” என்றார்.

முன்னதாக பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப் பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சிறைத் துறை அதிகாரியான டிஐஜி ரூபா புகார் தெரிவித்தார். இதற்காக, சிறைத்துறை டிஜிபி சத்தியநாராயணாவுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் அவர் புகார் கூறினார். இது நாடு முழுவதும் பெரும் பரப்பை ஏற்படுத்தியது.

மேலும் சசிகலா வண்ண உடைகளில் வலம் வருவது போன்ற வீடியோ காட்சிகள் செவ்வாய்க்கிழமை ஊடகங்களில் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.