சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார்

ஐதராபாத்:”சிறு வயதில் டீ விற்ற, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப்பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு உதாரணமாக, மோடி உள்ளார். அதுபோல, பெண்கள், தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள், இங்கு சாத்தியமே,” என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப், பாராட்டு தெரிவித்தார்.

இவாங்கா டிரம்ப், Ivanka Trump, நரேந்திர மோடி, Narendra Modi, பெண்கள் தொழில் முனைவோர், Women Entrepreneur,அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், US President Donald Trumpஜி.டி.பி., GDP, மொத்த உள்நாட்டு உற்பத்தி, Gross Domestic Product, பெண் தொழிலதிபர்கள், Female Businessmen, ஆஸ்திரேலியா ,Australia, ஹமிஷ் பின்லேசன், Hamish Pine Lasane,

தெலுங்கானா மாநிலத்தில், முதல்வர் சந்திர சேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாதில், 3 நாட்கள் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு நடக்கிறது.

2 சதவீதம் உயரும்

இதில் பங்கேற்க, அமெரிக்க அதிபர், டிரம்பின் மகளும், ஆலோசகருமான, இவாங்கா டிரம்ப் தலைமையிலான குழு வந்துள்ளது.இந்த மாநாட்டை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார்; நிகழ்ச்சியில், இவாங்கா டிரம்ப் பேசியதாவது:பெண்கள் தலைமையி லான தொழில்களின் வளர்ச்சி, இந்த சமுதாயத்துக்கு மட்டுல்ல, நம் பொருளாதாரத் துக்கும் மிகப்பெரிய பலத்தை ஏற்படுத்தும்.

தொழில் துவங்குவதில் உள்ள பாலினப் பாகுபாட்டைக் குறைத்தால், உலகின், ஜி.டி.பி., எனப்படும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம், 2 சதவீதம் உயரும் என, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. தொழில் துவங்குவதற்கு, பெண்களுக்கு தடையாக உள்ளவற்றை நீக்க வேண்டும். உலகெங்கும் பெண் தொழிலதிபர் கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், தொழில்

துவங்க, அதை நிர்வகிக்க மற்றும் அதை விரிவு படுத்த உள்ள பிரச்னைகள் களையப்பட வேண்டும்.

அமெரிக்காவில் பெண்கள் தொழில் துவங்குவதற் காக, அமெரிக்க சிறு தொழில் நிர்வாகம் சார்பில் கடன்கள் வழங்கப்படுகின்றன. மேலும், தொழில் பயிற்சிகள், நிபுணர்களின் ஆலோசனைகள் உட்பட பல்வேறு உதவிகளும் செய்யப்படுகின்றன.சிறு வயதில் டீ விற்று வந்த, நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். மிகப் பெரிய மாற்றம் சாத்தியம் என்பதற்கு, உதாரணமாக மோடி உள்ளார். அதுபோல, பெண்கள் தொழில் முனைவோராகத் தேவைப்படும் மாற்றங்கள் இங்குசாத்தியமே.