சிறந்ததோர் சமயச் சொற்பொழிவு ஸகாபுறோ நகரில் மார்ச் 12ம்திகதி…. ஆன்மிகச் சிந்தனைகளை கேட்டு அனுபவியுங்கள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அத்துடன்; மார்ச் 25ம் திகதி உங்கள் அபிமான கனடா உதயனின் வருடாந்த சர்வதேச விருது விழா.தவறாமல் கலந்து கொண்டு உங்கள் ஆதரவைத் தாருங்கள்.

கலைநிகழ்ச்சிகள் மற்றும் இராப்;போசன விருந்தும்…

அனுமதிச் சீட்டுக்களுக்கு 416 732 1608

இன்று என்னை
கனவு சுமந்து சென்றது.
இடது வலது என நடந்தும்,
பறந்தும்,
கிழக்கு மேற்காக,
முன்னர் பேசிய இலக்கியமேடை,
குந்தியிருந்து
நண்பர்களுடன் பேசிய பூங்கா,
புதுமனை புகுவிழா மடலுடன்,
திருமண அழைப்பிதலையும் தந்து சென்ற
எங்கள்
பழைய வீடு..
தூரப் பயணக் களைப்புடன் வந்து இறங்கிய
பத்மா டீச்சர்,
பாரதி கவிதைகளுடன்
தோழமையாகி,பின்பொரு நாளில்
உடல் சிதைந்து இறந்து கிடந்த
அம்மன்கோயில் சந்தி..
கிழக்கு வெளிக்கும்
என்று சொன்ன கல்லூரி நண்பன்
காணாமலே போனதாய்
நம்பி கண்டிபிடித்த
அவனது மிதிவண்டி கிடந்த அப்பண்ணை கடையடி..
கூவில் கள்ளடித்து
வீடு திரும்பும் வழியில்
வாத்தியாரைக் கண்டு ஒளித்த
மதகு…சைக்கிள் பழகப்போய்
யாரோ அவளின் வீட்டு வேலிக்குள்
விழுந்து
வெட்கப்பட்ட அதே வேலி..
எல்லாம்..எல்லாம்
கடந்து,
குளிர் எனினும்,
வந்து இறக்கியது
முன்னே
நீண்ட நேரமாக எரிந்துக்கிண்டிருந்தது
என் கவிதைகள் பிணமாக…
–முல்லைஅமுதன்