- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை

சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதின
சிரேஸ்ட ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் ஐயாத்துரை நடேசனின் 14வது நினைவுதினம் இலங்கை நேரப்படி இன்று வியாழககிழமை பிற்பகல் அனுஸ்டிக்கப்பட்டது
நாட்டுப்பற்றாளர் சிரேஸ்ட ஊடகவியலாளர் நடேசன் அவர்கள் 14 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் அரச பயங்கரவாதிகளின் ஏவுதலினால் தமிழ் பேசும் துப்பாக்கி தாரிகளினால் கொல்லபபட்டார் என்ற சோகமும் கோபமும் இன்னும் உலகத் தமிழ் மக்களின் மனங்களில் உறைந்து கிடக்கின்றது.
இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பிற்பகல் மட்டக்களப்பு காந்தி புங்காவில் நடைபெற்ற இந்த அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒனறியத்தின் தலைவர் திரு வா. கிருஸ்ணகுமார், தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் திரு வியாழேந்திரன், மட்டக்களப்பு மாநகர மேயர் திரு தி. சரவணபவன், பிரதி மேயர் திரு க. சத்தியசீலன, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு பா. அரியநேந்திரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதில் கலந்து கொள்ளவில்லை.