சிதம்பரம் வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய சிபிஐ :2 மணி நேரத்தில் ஆஜராக உத்தரவு

அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டியது.

ஐ.என்.எஸ்., மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. கைது நடவடிக்கையை தவிர்க்க அவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார். அதுவும் நிராகரிக்கப்பட்டால் அவர் கைதாவார்.

இந்நிலையில் டில்லியில் உள்ள சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். சிதம்பரம் வீட்டிற்கு இன்று ( ஆக.20) இரவு 11.30 மணிக்கு வந்த 4 சிபிஐ அதிகாரிகள், அடுத்த 2 மணி நேரத்தில் சிபிஐ அலுவலகத்தில் சிதம்பரம் நேரில் ஆஜராக வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி விட்டுச் சென்றனர்.
முன்னதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் வீட்டிற்கு வந்து சென்றநிலையில், சி,பி.ஐ. அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.