சாவகச்சேரியில் ரயில் மோதி 2 இளைஞர்கள் பரிதாபமாகப் பலியானார்கள்

சாவகச்சேரி-அரசடி புகையிர தக் கடவையில் நேற்று முன்தினம் புதன்கிழமை மாலை 7 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்ற கடுகதி ரயிலில் மோதி இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். ஏ9 வீதி யில் இருந்து அரசடி புகையிரதக் கடவை ஊடாக தாமோதரம் பிள்ளை வீதிக்கு மோட்டார் சைக்கிளில் செல்ல முற்பட்ட வேளை ரயில், மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறிப் பலியாகியுள்ளனர்.

இச் சம்பவத்தில் மட்டுவில் வடக்கைச் சேர்ந்த 22 வயதான மகாதேவன் கஜீபன், மட்டுவில் கிழக்கைச் சேர்ந்த 23வயதான மார்க்கண்டு திலக்சன் ஆகியோரே பலியாகியுள்ளனர். குறித்த புகையிரதக் கடவையில் சமிக்ஞை விளக்கு, அபாய ஒலி ஆகியன இயங்கிய நிலையில் இருந்த போதே இத் துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.ரயில் விபத்தில் கொல்லப்பட்ட இருவரும் கட்டட நிர்மானத்துறையில் வேலை செய்பவர்கள் எனவும் குறித்த சமயம் சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலை க்கு முன்பாக தாம் பணி புரியும் இடத்திற்கு சென்ற போதே இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவி த்துள்ளார்.

ம.சுஜீபனின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையிலும், திலக்சனின் சடலம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தி லும் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசார ணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.