சாமி-2வில் திரிஷா இல்லை!

விக்ரம்- ஹரி கூட்டணியில் உருவான படம் சாமி. நெல்லையை கதைக்களமாகக் கொண்டு உருவான இந்த படத்தில் ஆறுச்சாமி என்கிற அதிரடி போலீசாக நடித்திருந்தார் விக்ரம். நாயகியாக திரிஷா நடித்தார். அப்படம் சூப்பர் ஹிட்டானதால் இப்போது அப்படத்தின்

இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் டைரக்டர் ஹரி. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் நடக்க யிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், சாமி படத்தில் நடித்த திரிஷா இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் பரவிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இப்போது அதுகுறித்து விசாரித்தால், சாமி படத்தில் விக்ரம்-திரிஷாவுக்கு திருமணமாகி விட்டதால் இந்த பாகத்தில் திரிஷா கேரக்டருக்கு வேலையே இல்லையாம். அதனால் திரிஷாவுக்குப் பதிலாக இளவட்ட நாயகி யாரையேனும் கதைக்குள் இணைக்கலாம் என்று சில நடிகைகளை பரிசீலித்து வருகிறார் ஹரி.

அப்படி அவரது பரிசீலணையில் ராகுல் ப்ரீத் சிங், மெட்ராஸ் படத்தைத் தொடர்ந்து தற்போது கடம்பன் படத்தில் நடித்துள்ள கேத்ரின் தெரசா ஆகிய நடிகை கள் பட்டியலில் உள்ளார்களாம். ஆனபோதும், இவர்களில் இன்னும் யாரையும் உறுதிப்படுத்தவில்லை என்று கூறப்படுகிறது.