சவுதியில் 37 பேருக்கு மரண தண்டனை

ரியாத் சவுதி அரேபியாவில் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்நாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் அந்நாட்டை சேர்ந்த 37 பேர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடந்த விசாரணையில், அவர்கள் நாட்டின் பாதுகாப்பினை சீர் குலைக்க மற்றும் குழப்பங்களை விளைவிக்க, ‘ஸ்லீப்பர் செல்’லாக செயல்படும் பயங்கரவாத குழுக்களை உருவாக்கி வந்தது தெரிய வந்தது. அதனால், அந்நாட்டு சட்டப்படி அவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றுவது என முடிவானது.இதைத் தொடர்ந்து அந்நாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய குற்றச்சாட்டில் 37 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.